சென்னை:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.ஆர். கோகுலகிருஷ்ணன். இவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொடைக்கானல் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் அப்போதைய குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநராக பணியாற்றிய அதிகாரி அம்பலவாணன் என்பவர் பினாமிகள் மூலம் வாங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொநல வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வனத்துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த உத்தரவிட்டது. இந்த முறைகேட்டுக்கு அப்போதைய வத்தலக்குண்டு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்தனர்.