தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்.ஐ.சி நிறுவன ஊழியர்கள் கரோனா உதவி

எல்.ஐ.சி காப்பீடு நிறுவனத்தின் ஊழியர்கள், அலுவலர்கள் இணைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, தாம்பரம் காசநோய் மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

By

Published : Jun 5, 2021, 6:26 PM IST

எல்.ஐ.சி நிறுவன ஊழியர்கள் கரோனா உதவி
எல்.ஐ.சி நிறுவன ஊழியர்கள் கரோனா உதவி

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியான மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி காப்பீடு நிறுவனத்தின் ஊழியர்கள், அலுவலர்கள், முகவர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஒன்றிணைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, தாம்பரம் காசநோய் மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

இதனை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பெற்றுக்கொண்டு நன்றியைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திடீர் மூச்சுத் திணறல்- ஐசியூவில் மில்கா சிங்!

ABOUT THE AUTHOR

...view details