சென்னை: நாளை மறுநாள் (அக்.19) 'லியோ' திரைப்படம் வெளியாகயவுள்ளது. இதையடுத்து கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என 'லியோ' திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 7 மணி காட்சி வேண்டும் என்றால் தமிழக அரசிடம் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என கருத்து தெரிவித்தது.
மேலும், பட தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை நாளைக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்காக உள்துறை செயலாளரை நேரில் சந்திக்க 'லியோ' திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் குழுவினர் தலைமைச் செயலகம் சென்றிருந்தனர்.
தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு, 'லியோ' பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் குழுவினர் தாங்கள் வந்த காரில் திரும்பினர். அப்போது தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்கள் நிலா மற்றும் சரவணன் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டு இருந்தனர்.