சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (டிசம்பர் 30) மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. திடீரென பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை விட பல மடங்கு மழை பெய்ததால் வாகனப் போக்குவரத்து, சுரங்கப் பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.