சென்னை, பெரியமேடு, கரியப்பா தெருவைச் சேர்ந்தவர் சையது மூசா. இவர் தோல் வியாபாரம் செய்து வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்த சிராஜுதீன் என்பவர், தோல் வியாபாரிகளுக்கு இடையே ஏஜெண்ட்டாக உள்ளார். இந்நிலையில், அக்ரம்கான் என்பவரிடம் ரூ.15 லட்சம் மதிப்புடைய தோல்களை சிராஜுதீன், சையது மூசாவிற்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்கான பணத்தை மூசா கொடுத்துள்ளார். இருப்பினும், சிராஜுதீன் அந்தப் பணத்தை அக்ரம் கானுக்கு கொடுக்காமல், சையது மூசா பணம் தரவில்லை என பொய் கூறியதாக கூறப்படுகிறது.
தோல் வியாபாரியை காரில் கடத்தி தாக்கிய 4 பேர் கைது! - கடத்தல்
சென்னை: பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பெரியமேட்டில் தோல் வியாபாரியை காரில் கடத்தி தாக்கிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
kidnap
இதில், ஆத்திரமடைந்த அக்ரம்கான் அவரது தம்பி யூனிஸ் கானுடன் இணைந்து, சையது மூசாவை காரில் கடத்தி கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. மேலும், ரூ.15 லட்சம் பணத்திற்காக வெறும் பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சையது மூசா அளித்த புகாரின்பேரில் பெரியமேடு காவல் துறையினர் சிராஜுதீன் உட்பட நான்கு பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள அக்ரம்கான், யூனிஸ் கான் ஆகியோரை தேடி வருகின்றனர்.