சென்னையை அடுத்த தாம்பரத்தில் வசித்து வந்த மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனைமுத்து பாண்டிச்சேரியில் மாரடைப்பால் உயிரிழந்தார். 96 வயதான பெரியாரிய சிந்தனை கொண்ட இவர் மண்டல் கமிஷன் உருவாகக் காரணமாக இருந்து போராடியவர்.
மறைந்த ஆனைமுத்துவிற்குத் தலைவர்கள் மரியாதை - Marxist Periyar Public Property Party
சென்னை: தாம்பரத்தில் பெரியாரின் சீடரான ஆனைமுத்துவின் உடலுக்கு திக தலைவர் கி. வீரமணி, ஜி. ராமகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இவரது உடல் தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.
இன்று(ஏப்ரல் 7) அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நடிகர் மன்சூர் அலிகான், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.