தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது அருந்திவிட்டு காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவன்! - chennai news in tamil

மது அருந்திவிட்டு போக்குவரத்துக் காவலரிடம் சிக்கிய சட்டக்கல்லூரி மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

law-studant-involved-in-dispute-with-police-viral-video
மது அருந்திவிட்டு காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவன்

By

Published : Jul 12, 2021, 2:51 PM IST

சென்னை:தாம்பரம் காந்தி சாலையில் தாம்பரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று இரவு காவலர்கள் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபரைப் பிடித்து நிறுத்தி விசாரணை செய்ததில் அவர், அதிக அளவு மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு வாகனத்தைப் பறிமுதல்செய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வாகனத்தை ஓட்டிவந்த நபர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

மது அருந்திவிட்டு காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவன்

அவரிடம் விசாரணை செய்ததில் அவர் கீழ்கட்டளைப் பகுதியைச் சேர்ந்த செலின் என்பதும், சட்டக் கல்லூரியில் அவர் படித்துவருவதும் தெரியவந்தது. போதையில் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது.

இதையும் படிங்க:சாலையின் நடுவே அமர்ந்து ரகளை செய்த போதை ஆசாமி

ABOUT THE AUTHOR

...view details