தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

B.Ed Admission: பிஎட் படிப்பில் சேர்வதற்கு வரும் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - UGC

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் பிஎட் படிப்பில் சேர்வதற்கு வரும் 8ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 1, 2023, 5:44 PM IST

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகம் பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு தொலைநிலை சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 24ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது.

தமிழ்நட்டில் 2000ஆம் ஆண்டு முதல் பி.எட், சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வெற்றிகரமாக தொலைநிலையில் நடத்திவரும் ஒரே பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகும். பிட்எட் படிப்பானது பல்கலைககழக மானியக் குழு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.

பிஎட்(பொது) பட்டத்திற்கு இணையானது என தமிழ்நாடுஅரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்படிப்பை முடிப்பவர்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இப்படிப்பை அரசு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் பரவலாக அந்துள்ள கல்வி மையங்கள் மூலம் நடத்தி வருகிறது

2003ஆம் ஆண்டிற்கான பிஎட் சிறப்புக் கல்வி பட்டம் படிப்பிற்கான ஆன்லைன் மூலம் வரும் 8ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேட்டினை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24306017 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டான்செட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details