சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் உள்ள எல்லைக் குட்டை என்ற பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 30 வருடமாக வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து வசித்துவந்தனர். இந்த விவகாரம் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் பிரபாகரனுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை இடித்து அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
புறம்போக்கு இடத்தில் வீடு: அலுவலர்கள் தலைமையில் அகற்றம்! - நீலாங்கரை
சென்னை: நீலாங்கரையில் கடந்த 30 வருடங்களாக அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடு நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது.
land
முன்னதாக வட்டாட்சியர் பிரபாகரன் தலைமையிலான அரசு அலுவலர்கள் அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு வீடுகள் அகற்றப்பட உள்ளதாக நோட்டீஸ் வழங்கினர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் ஜேசிபி இயந்திரத்துடன் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தில் உள்ள 13 வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.