சென்னை:ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகா தண்டலம் கிராமத்தில், லீலாகுமாரி என்பவர் தனது கணவரிடமிருந்து செட்டில்மென்ட் மூலம் 33 சென்ட் நிலத்தை 2010ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
தனக்குச் சொந்தமான இந்நிலத்தைப் பராமரிக்க வேண்டி 2015ஆம் ஆண்டு சாதிக் பாஷா என்பவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவுசெய்து கொடுத்துள்ளார். இதனைப் பெற்ற ஜாபர் சாதிக் பாஷா, அவருக்கு வகுத்த ஒப்பந்தப்படி நடந்துகொள்ளாததால், அந்தப் பொது அதிகார பத்திரத்தை அதே ஆண்டே ரத்துசெய்துள்ளார்.
நில அபகரிப்பு
இந்நிலையில் ஜாபர் சாதிக் பாஷா, லீலாகுமாரியின் சொத்தை அபகரிக்கத் திட்டமிட்டு, லீலாகுமாரியைப் போல் வேறு ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்யவைத்து 2021ஆம் ஆண்டு போலியான பொது அதிகார பத்திரத்தை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜாபர் சாதிக் பாஷா தன் பெயரில் பதிவுசெய்துள்ளார்.
அந்தப் போலி பத்திரத்தை அடிப்படையாக வைத்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவமணி என்பவருடன் கூட்டு சேர்ந்து, கிரைய ஒப்பந்தம் பத்திரத்தை பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து, லீலாகுமாரிக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்துள்ளார்.