தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெ.ஆட்சியில் அமைக்கப்பட்ட நில அபகரிப்பு பிரிவு:  8 வழக்குகளில் மட்டுமே தண்டனை... - ஜெ.ஆட்சியில் அமைக்கப்பட்ட நில அபகரிப்பு பிரிவு

கடந்த பத்து வருடத்தில் நில அபகரிப்பைத் தடுப்பதற்காக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவின் மூலம் 8 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஜெ.ஆட்சியில் அமைக்கப்பட்ட நில அபகரிப்பு பிரிவு
ஜெ.ஆட்சியில் அமைக்கப்பட்ட நில அபகரிப்பு பிரிவு

By

Published : Dec 17, 2021, 6:40 AM IST

Updated : Dec 17, 2021, 10:04 AM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் 2012 ஆம் ஆண்டு நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.

இந்தப் பிரிவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு நிரந்தரமாக தடைவிதித்து நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு செயல்பட அனுமதித்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

ஒரு லட்சம் புகார்கள்

அந்த அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 251 நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்துள்ளனர். ஆனால், இதில் 4,461 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம்

அதில் 1,782 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 10 வருடங்களில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 2 வழக்குகளும், வேலூரில் 2 வழக்குகளிலும், நாகப்பட்டினம், தர்மபுரி, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 1 வழக்கு என மொத்தமாக 8 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

10 ஆண்டுகளில்.. 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை

சிறப்பு நீதிமன்றம்

மேலும், 1,621 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 994 வழக்குகள் தொடர்ந்து விசாரணை நிலையிலேயே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 4,061 புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்படாமல் முதற்கட்ட விசாரணையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான மற்றொரு வழக்கில், நில அபகரிப்புக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வழக்குகளை விரைந்து முடிக்கவும், மற்ற நீதிமன்றங்களுக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு தொடர்பான 595 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 'தங்கமணி கிரிப்டோகரன்சியில் எத்தனை கோடியை முதலீடு செய்துள்ளார்' - விசாரணையில் சைபர் நிபுணர்கள்

Last Updated : Dec 17, 2021, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details