இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக ஒரு பெண் காவலர் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் நீதிபதி குறித்தும் காவலர்களின் பண பலன்கள், பணி நெருக்கடி உள்ளிட்டவைகளை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக பேசியிருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கையில் அந்த ஆடியோவில் பேசியது சென்னை அசோக் நகர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் பெர்சியல் என்பது தெரியவந்தது. இவரை சென்னை காவல் ஆணையர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
நீதிபதிக்கு ஒன்னுன்னா நாங்கதான் வரணும் -ஆடியோ சர்ச்சை - காவல் உதவி ஆய்வாளர்
சென்னை: தலைக்கவசம் அணியாத காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் காவலர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நீதிபதிக்கு ஒன்னுன்னா நாங்கதான் வரணும் -ஆடியோ சர்ச்சை
சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் மதன் குமார் என்பவர், இரண்டு வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர்களை கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் வலைதளங்களில் விமர்சித்து பேசி வருகின்றனர்.
சமூகத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பதுதான் காவலர்களின் முதன்மையான பணி. ஆனால், தங்களுடைய சக ஊழியர்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை விமர்சித்து பேசியதற்கு பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.