சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் உயர் அலுவலர்களுடன் அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் சார்பில் 35க்கும் மேற்பட்ட ஆய்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏழு ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது” என்றார்.
தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை ஏன், என உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ”சீனாவில் மருத்துவ மாணவர்கள் ஓராண்டு கலாசார மருத்துவம் படிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே சந்தேகப் பார்வைக்குக் காரணம்” என்று கூறினார்.