சென்னை: தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, 2023இல் தேசிய நிறுவன தரவரிசையில் முதல் பத்து இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநரின் பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு முதல் பத்து இடங்கள் பிடித்த நிறுவனங்களுக்குச் சான்றிதழ் வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சவிதா பல்கலைகழகம் எஸ்.ஆர்.எம், அண்ணா, மீனாக்ஷி, தியாகராஜன், பி.எஸ்.ஜி, ராமசந்திரா, ஏசி. சண்முகா, வி.ஐ.டி போன்ற பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகத்தின் வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தரவரிசையில் இடம் பெற முக்கிய காரணங்கள் மற்றும் கல்லூரியின் சிறப்புகளை ஒவ்வொரு கல்லூரி பேராசிரியர்களும் LED திரை மூலம் விளக்கம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வி நிறுவனங்களை பற்றி தொடர்ந்து பேசி வந்த ஆளுநர் ரவி, 70 சதவீதம் மாணவர்கள் வரலாறு மற்றும் மனிதநேயம் தொடர்பான படிப்புகளை படிக்க முன்வருவதில்லை எனவும், மாணவர்கள் முதலில் வரலாறு மற்றும் மனிதநேயம் தொடர்பான படிப்புகளை படிக்க முன் வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், (Reservation) ரிசர்வேஷனால் தான் பல மாணவர்கள் தங்களுக்கு உரிமையான கல்வியை கற்க ஒரு சிறப்பான வாய்ப்பு அமைகிறது எனவும், இந்த மாநிலத்திற்கு வந்த பிறகு தான் எனக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்ற பல்கலைக்கழகங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை என்று தெரியவந்தது என்றும்; அதை மாற்ற நினைக்கிறேன் என்றார்.
மேலும், சென்னை பல்கலைக்கழகம் நிதி சிக்கலில் உள்ளதை குறிப்பிட்டார். Nirf ரேங்கில் வராமல் இருக்கும் உயர்கல்வி நிலையங்கள் செயல்படவில்லை எனப் பொருள் இல்லை என்றார்.