தமிழ்நாடு

tamil nadu

’கரோனா வார்டில் அடிப்படை வசதிகள் இல்லை’ - நோயாளிகள் குற்றச்சாட்டு

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் கல்லூரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள், தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

By

Published : Jun 7, 2020, 8:43 PM IST

Published : Jun 7, 2020, 8:43 PM IST

corona
corona

சென்னை புறநகர் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நோயாளிகளை மருத்துவமனையில் அதிக நாள் தங்கவைக்க முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் தனியார் கல்லூரிகளில் கரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு நோயாளிகள் தங்கவைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தாம்பரத்தை அடுத்து சேலையூரில் உள்ள பாரத் பொறியியல் கல்லூரியில் கரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கரோனோவால் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள், தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். மருத்துவச் சிகிச்சை கூட அளிக்காமல் இருந்து வருவதாகவும், கழிவறைகள் சுத்தம் செய்யாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வார்டில் அடிப்படை வசதிகள் இல்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

நோயாளிகள் இதுகுறித்து தொலைப்பேசியில் தாம்பரம் வட்டாட்சியர் சரவணனிடம் கேட்டபோது, “உங்களின் குறைகளைப் பற்றி என்னிடம் சொல்லக்கூடாது. உங்களுக்கு எது தேவை என்றாலும் சுகாதார அலுவலர்களிடம் கேளுங்கள். அடிப்படை வசதி இல்லை என்றால், மாநகராட்சி அலுவலர்களிடம் கேளுங்கள். இது சம்பந்தமாக என்னிடம் எதுவும் பேசக்கூடாது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றாலும் நடத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையும் படிங்க:வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை: மாவட்ட நிர்வாகத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details