வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், நாடு தழுவிய அளவில் பல்வேறு விவசாய, விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் செப்டம்பர் 25ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. அதே தினத்தில் தமிழ்நாட்டிலும் போராட்டம் நடைபெறவுள்ளது.
'வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகளுடன் போராடுவோம்' - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! - agri bill protest
சென்னை: வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 25, 28ஆம் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பு பங்கேற்கும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
'வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகளுடன் போராடுவோம்' - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
மேலும், செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டம் நடத்தவுள்ளன. இந்த இரண்டு போராட்டங்களிலும், அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:வேளாண் மசோதாவில் என்ன தவறு உள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் கூற வேண்டும்'