தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயோடேட்டா சர்ச்சை: கொங்குநாடு குறித்து விளக்கமளித்த எல். முருகன் - கொங்குநாடு குறித்து விளக்கமளித்த எல். முருகன்

ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தனது பயோடேட்டாவில் ‘கொங்குநாடு’ என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு விளக்கமளித்துள்ளார்.

Kongunadu controversy LMurugan spokeout
Kongunadu controversy LMurugan spokeout

By

Published : Jul 16, 2021, 7:33 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு மோடி அரசின் அமைச்சரவையில் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களின் சுயவிவரக் குறிப்பு ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டது. இதில் எல். முருகனின் சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் என்பதற்கு பதிலாக கொங்குநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசு இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், சென்னையில் செய்தியாளரை சந்தித்த எல். முருகன் இதற்கு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, கொங்குநாடு என்ற வார்த்தை உள் நோக்கத்தோடு குறிப்பிடப்பட்டது அல்ல. தட்டச்சுப் பிழையால் அந்த வார்த்தை விழுந்துள்ளது என பதிலளித்தார்.

கொங்குநாடு குறித்து விளக்கமளித்த எல். முருகன்

நாமக்கல் என்ற வார்த்தை டைப்பிங் மிஸ்டேக்கில் எப்படி கொங்குநாடு ஆகும் என சமூக வலைதளங்களில் இதை கலாய்த்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்தவர்கள்தான் கொங்குநாடு கான்செப்டை கிளப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கண்காணிப்பு பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details