தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்டாலின், உதயநிதியை வேல் பிடிக்க வைத்துள்ளோம்' - எல்.முருகன் பெருமிதம் - பாஜக கூட்டம்

இறைநம்பிக்கை இல்லாத மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை வேல் பிடிக்க வைத்திருக்கிறோம் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

'ஸ்டாலின், உதயநிதியை வேல் பிடிக்க வைத்துள்ளோம்' - எல்.முருகன் பெருமிதம்
'ஸ்டாலின், உதயநிதியை வேல் பிடிக்க வைத்துள்ளோம்' - எல்.முருகன் பெருமிதம்

By

Published : Jun 25, 2021, 2:32 PM IST

சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, தமிழ்நாடு பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றி தோல்வி குறித்தும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் போது அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

'4 இடங்களில் தாமரை மலர்ந்துள்ளது'

இக்கூட்டத்தில் பேசிய எல்.முருகன், "தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில், தாமரை மலராது என்று சொன்னார்கள். ஆனால் இன்று நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அது மட்டுமல்ல, அண்டை மாநிலமான புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

பாஜக கூட்டம்

ஸ்டாலினும் அவரது மகனும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் கையிலேயே வேல் பிடிக்க வைத்து உள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றம் ஒவ்வொரு தொண்டரின் உழைப்பு. இதேபோல நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க; ஆளுநர் உரை...மு.க.ஸ்டாலின் புகழ்பாடும் உரை - எல். முருகன்

ABOUT THE AUTHOR

...view details