தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டாடா ஏஸ்' வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்த குஷ்பு சுந்தர்! - தீவிர பிரச்சாரத்தில் குஷ்பு

ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர் வீடு வீடாகச் சென்று தனக்கே உரிய பாணியில் வாக்குச் சேகரித்துவருகிறார்.

வாக்கு சேகரித்த குஷ்பு சுந்தர்
வாக்கு சேகரித்த குஷ்பு சுந்தர்

By

Published : Apr 2, 2021, 2:15 PM IST

சென்னை: தமிழ்நாடு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மக்கள் மனத்தில் தங்களை நிறுத்திக்கொள்ள தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், சிறுபான்மையினர் வாக்கு அதிகமுள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு சுந்தர் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நாள்தோறும் மக்களைச் சந்தித்து குஷ்பு வாக்குச் சேகரித்துவருகிறார்.

வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் குஷ்பு பெண்களின் தேவைகளைக் கேட்கிறார், தொகுதிப் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். பரப்புரைகளுக்கு இடையில், தனக்கே உரிய பாணியில், குழந்தைகளைக் கொஞ்சியும், தொகுதி மக்களுடன் செல்பி எடுத்தும் வாக்குகள் சேகரித்துவருகிறார்.

இந்தத் தீவிர பரப்புரையில் இன்று (ஏப். 2) திறந்தவெளி வாகனத்தில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தாமரைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், குஷ்புவின் பரப்புரை தீவிரமடைந்துவருகிறது.

தீவிர பரப்புரையில் குஷ்பு

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களைக் குறிப்பிட்டு வாக்குச் சேகரிக்கும் குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆயிரம் விளக்குத் தொகுதி திமுகவின் பலத்தை உணர்ந்து புதுப்புது யுக்திகளைக் கையாண்டு மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குச் சேகரித்துவருகிறார் குஷ்பு சுந்தர்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை

ABOUT THE AUTHOR

...view details