சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், ஈ.வெ.கி. சம்பத்தின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சிலர் கே.எஸ் அழகிரி சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பாஜக விட பத்து மடங்கு வெற்றி
அப்போது பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியும் பல இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலினின் 9 மாத ஆட்சிக் காலத்திற்கான ஒரு அன்பு நற்சான்றிதழ் தான் இந்த வெற்றி. இதற்காக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் எங்களது வெற்றி சதவீதம் 72 ஆக உள்ளது. ஆனால், அவர்கள் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான தோல்வியைப் பெற்ற கட்சி தான் பாஜக. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி போட்டு இருந்தால் தற்போது பாஜக வெற்றி பெற்றதை விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும்.
எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்