தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

K.S. Alagiri comments on religious conversion: ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது அவரவர் சுய விருப்பம் - கே.எஸ்.அழகிரி - ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது அவரவர் சுய விருப்பம்

K.S. Alagiri comments on religious conversion: ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது அவரவர் சுய விருப்பம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 28, 2021, 6:58 PM IST

K.S.Alagiri comments on religious conversion: சென்னை: காங்கிரஸ் கட்சியின் 137ஆவது நிறுவன தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர மகாத்மா காந்தி நினைவு கொடிக்கம்பத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து காந்தி, ஜவஹர்லால் நேரு, காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட மூத்தத் தலைவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4,625 கோடி ரூபாய் வெள்ள நிவாரணத்தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

மகாத்மாவை கலங்கப்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம்

தமிழ்நாட்டில் ஏராளமான கைத்தறி நூல் சங்கங்கள் இருக்கின்றன. எனவே, முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்கு கைத்தறித் துணிகளை சீருடைகளாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். திருவொற்றியூர் கட்டட விபத்திற்கு திமுக அரசு காரணமாக முடியாது. அதிமுக அரசுதான் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது. எனவே, இந்த விபத்திற்கு அவர்கள் தான் காரணமாக இருக்க முடியும்.

இனிவரும் காலங்களில் கட்டடங்களை சரியாக ஆராய்ந்து கட்ட வேண்டும். மகாத்மா காந்தியையும் நேருவையும் கலங்கப்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம்.

இந்திய மக்கள் அனைவரும் தாய் மதத்திற்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகன் பகவத் சொல்வது தவறான கருத்து.

ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது அவரவர் சுய விருப்பம். அனைவரும் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றால், தாய் மதத்தில் இருக்கக்கூடிய குறைகளை நீக்க வேண்டும். நான் ஒரு இந்து என்ற உரிமையில் இதைச் சொல்கின்றேன்" என்றார்.

இதையும் படிங்க:இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details