தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணா கால்வாயின் கரைகளை உறுதிப்படுத்துங்க..! - சமூகஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் கரைகள் சரிந்துள்ளதால், பூண்டி ஏரிக்கு வரும் நீரின் வரத்து குறைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

file pic

By

Published : May 14, 2019, 8:16 AM IST

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கியமானதாக உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு, தேவைப்படும்போது சென்னை குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளகாக பருவமழை பொய்த்து பொனதால் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. தற்போது கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் இருந்த தண்ணீர் பெருமளவு வறண்டு விட்டதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணா கால்வாயில் கரைகள் சரிவு

இந்நிலையில் ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி ஏரி வரை கிருஷ்ணா கால்வாய்கள் பெருமளவு சேதம் அடைந்து காணப்படுகிறது. கிருஷ்ணா கால்வாய் சரிந்து தண்ணீர் செல்வதை தடுக்கும் நிலையில் உள்ளது. இதனால் சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து இன்னும் இரண்டு மாதங்களில் திறந்துவிட உள்ள நிலையில் தமிழக பகுதிகளில் கால்வாய் சேதம் காரணமாக, பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபடும். எனவே கிருஷ்ணா கால்வாயை சீர்செய்யவும், கோடைமழை தொடங்குவதற்கு முன்பாகவே பூண்டி நீர்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details