தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கே.பி. முனுசாமிக்கும் திமுகவிற்கும் தொடர்பு இருக்கிறது’ - கோவை செல்வராஜ் - திமுக

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமிக்கும் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமிக்கும் திமுகவிற்கும் தொடர்பு இருக்கிறது - கோவை செல்வராஜ் பேட்டி
கே.பி.முனுசாமிக்கும் திமுகவிற்கும் தொடர்பு இருக்கிறது - கோவை செல்வராஜ் பேட்டி

By

Published : Jul 8, 2022, 4:45 PM IST

சென்னை: பசுமைவழிச் சாலையிலுள்ள இல்லத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய கே.பி. முனுசாமி, ஓபிஎஸ்-க்கு திமுகவுடன் தொடர்பு உள்ளதாக கூறியிருந்தார்.

கே.பி. முனுசாமியின் மகன் சதீஸ்க்கு கிருஷ்ணகிரியில் உள்ள பால்வளத்துறைக்குச் சொந்தமான இடத்தை பெட்ரோல் பல்க் வைப்பதற்காக அதிமுகவின் குப்புசாமி என்பவர் முடித்து கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது உள்ள முதலமைச்சருக்கு தெரியுமா என தெரியவில்லை.

இந்த பெட்ரோல் பல்கை திமுகவில் அமைச்சராக இருக்கக்கூடிய காந்தி திறந்து வைத்தார். இந்த விவகாரம் மூலம் அதிமுகவின் ரகசியங்களை திமுகவிற்கு கூறும் கே.பி. முனுசாமியின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. அரசு இடத்தை 99 ஆண்டுக்கு குத்தகையை விட்டிருக்கின்றனர்.

இதற்கு யார் காரணம் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிடும் பொழுது கொடுக்கப்படுகின்ற சொத்து மதிப்பிற்கும் தற்போது உள்ள சொத்து மதிப்பிற்கும் ஒப்பிட்டு பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். அதன் அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடக்கின்றது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சியில் இருக்கும்’ - அமைச்சர் ஐ. பெரியசாமி

ABOUT THE AUTHOR

...view details