தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரட்டூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி - அரசு மருத்துவமனையில் சிகிச்சை - Korattur corona Symptom

சென்னை: கொரட்டூரில் மருந்து விற்பனை பிரதிநிதிக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரட்டூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி
கொரட்டூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி

By

Published : Mar 28, 2020, 7:10 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநில அரசு கரோனா வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 45 வயது மதிக்கத்தக்க மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதி ஒருவருக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. இதனால் அவர், தனக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருக்கும் என நினைத்து 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வேனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

கொரட்டூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி

இதையடுத்து, ஊழியர்கள் அவரை வேனில் அழைத்துச் சென்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் ஒருவருக்கு மட்டுமே கரோனா - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details