தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் தேர்தல் முறைகேடு குறித்து தலைமை தேர்தல் அலுவலரிடம் காங்கிரஸ் புகார்

சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம், காங்கிரஸ் ஊடக பிரிவுத் தலைவர் கோபண்ணா மற்றும் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

கோபண்ணா

By

Published : May 17, 2019, 11:32 AM IST


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து கோபண்ணா பேசுகையில், வருகின்ற 19ஆம் தேதியன்று தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்கள் அதிமுகவினருக்கு சாதகமாக திருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று அதிமுக வேட்பாளரும், ஓபிஎஸ் மகனுமான ரவிந்தரநாத் குமார் பணம் கொடுக்கவும், முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை

மேலும், தொகுதிக்கு சட்டவிரோதமாக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இது குறித்து திமுகவும், நாங்களும் புகார் அளித்துள்ளோம். இதற்கு முறைகேடாக கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இருக்காது என தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த கோபண்ணா

ABOUT THE AUTHOR

...view details