சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள்குமார்(24)-சந்தியா(20) தம்பதியினர். அருள்குமார் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடன் சந்தியாவின் தாய் சரிதா, தந்தை சங்கர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது! - police arrested husband
சென்னை : குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 11 மணி அளவில் அருள்-சந்தியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருள்குமார் கத்தியால் சந்தியாவின் தொண்டையில் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சந்தியா உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற சந்தியா தாயார் சரிதாவுக்கு கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் பிராங்க் ரூபன் சந்தியாவின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருள் குமாரை கைது செய்த போலீஸார், குடும்பத் தகராறால் இந்த கொலையை செய்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.