தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை காட்டும் படம் - இயக்குநர் ராகவன்! - பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம்

பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம் படம் குழந்தைகளின் அழகான உலகத்தை காட்டும் படமாக இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் என்.ராகவன் தெரிவித்துள்ளார்.

“மை டியர் பூதம்”குழந்தைகளின்  அழகான உலகத்தை நமக்கு காட்டும் - இயக்குநர் N ராகவன்!
“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் - இயக்குநர் N ராகவன்!

By

Published : Jul 13, 2022, 2:55 PM IST

சென்னை:அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கி டி.இமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கத்தை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.

ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கும் இப்படம் ஜூலை 15 இல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறுகையில் என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது.

“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் - இயக்குநர் N ராகவன்!

தமிழில் குழந்தைகள் உலகைச் சொல்லும் படங்கள் அதிகமாக இல்லை எனவே அதை சொல்லலாம் என நினைத்தேன். குழந்தைகள் உலகைப் புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறையப் பழகினேன். குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த திரைக்கதை எழுதினேன்.

தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளையிடம் இந்தக் கதை சொன்ன போது அவர் பிரபுதேவா மாஸ்டர் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். நானும் அவரை மனதில் வைத்தே எழுதியிருந்தேன். அதனால் பிரபுதேவா மாஸ்டரிடம் கேட்டோம் அவருக்கு கதை பிடித்து உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது என தெரிவித்தார்.

மேலும் இந்தப்படத்திற்காக பிரபுதேவா மாஸ்டர் மொட்டை போட வேண்டியிருந்தது. அவர் அப்போது நிறைய படங்கள் செய்து கொண்டிருந்ததால், யோசித்தார் கெட்டப் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு அவரே மொட்டை போட்டுக்கொண்டு நடித்தார். 45 நாட்கள் எங்குமே அவர் தலை காட்டவில்லை. இந்தப்படத்திற்காக முழுக்க அர்ப்பணிப்போடு உழைத்தார் என்றும், அந்த கெட்டப்பில் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள் என்றும் புகழ்ந்தார்.

குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாகவும் குழந்தைகள் கொண்டாடும் ஒரு படமாகவும் “மை டியர் பூதம்” இருக்கும் -இயக்குநர் N ராகவன்!

மேலும் படத்தில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரத்தைப் பற்றி பேசிய இயக்குநர் என்.ராகவன். இப்படத்தில் குழந்தையாக வரும் அஷ்வந்த கலக்கியிருக்கிறார். பிரபுதேவா இந்தப்பையன் நம்மை தூக்கி சாபுடறான்ம்பா என்று புகழ்ந்தார். இந்தப்படத்தில் பரம் குகனேஷ், ஆலியா, சாத்விக், சக்தி, ஆகியோருடன் என்னோட பொண்ணு கேசிதாவும் ஒரு கதாபாத்திரம் செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் சம்யுகதா ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறிய அவர் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாகவும் குழந்தைகள் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என்றார்.

இதையும் படிங்க:’விக்ரம்’ படத்தை புகழ்ந்த கேஜிஃப் மற்றும் பிரேமம் பட இயக்குநர்கள்

ABOUT THE AUTHOR

...view details