சென்னை நொளம்பூர் மாதா கோவில் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சக்தி முருகன் (30). இவர் பல்லாவரத்தில் ஹோட்டல் ஒன்றை மூன்று வருடமாக நடத்தி வருகிறார். இவர் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவரிடம் ரூ.50 லட்சத்தை 5 விழுக்காடு வட்டிக்கு கடனாக வாங்கினார். சக்தி முருகன் கடந்த இரண்டு மாதம் வட்டி பணம் கட்டவில்லை.
இதனால், வட்டி கட்டும்படி கேட்டும் தரவில்லை. பிறகு, பிரபாகர் சக்தி முருகனை நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் ஹைரோட்டில் சக்தி முருகன் வந்ததும், பிரபாகர் அவரை அடித்து, உதைத்து கத்தியை காட்டி மிரட்டி, ஆட்டோவில் கடத்திச் சென்றார்.
பிறகு முகப்பேர் பகுதிக்கு அழைத்து, ஆட்டோவில் வைத்து அடித்து உதைத்து உள்ளார். அண்ணாநகர் ரவுண்டானா அருகில் ஆட்டோ சென்ற போது சக்தி முருகன் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டுள்ளார்.