தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனைத் தாக்கிய விவகாரம்: கோவை மாநகர காவல் ஆணையர் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

சென்னை: முழு ஊரடங்கின் போது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர், அவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க கோவை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Kid beaten up by cops in Coimbatore, HRC take suo motu
Kid beaten up by cops in Coimbatore, HRC take suo motu

By

Published : Aug 26, 2020, 3:07 PM IST

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்த போது, கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் துர்காராஜ் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மூன்று இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்ததை கண்ட அவர்கள், இளைஞர்களை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு துரத்திச் சென்றனர்.

அப்போது வாகனத்தில் இருந்த 13 வயது சிறுவன், இறங்கி நடந்து சென்றபோது, அவரைப் பிடித்த துர்காராஜ், கடுமையாக தாக்கியுள்ளார்.

ரத்த காயத்துடன் சிறுவன் இருந்த காணொலி சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, துர்காராஜ், கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details