கொச்சி மராடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதாக நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜெயின் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் மேத்தா, தான் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜெயின் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதாகவும், கொச்சியில் உள்ள கிளை நிறுவனத்தை கவனித்து வருவதால், தன்னைக் காவல் துறை தவறான வழக்கில் கைது செய்ய முயற்சிப்பதாகவும் கூறி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், முதற்கட்டமாக நான்கு வாரத்திற்கு சந்தீப் மேத்தாவுக்கு முன்ஜாமின் வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சில மாற்றங்கள் செய்யக்கோரி மனுதாரர் சார்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.