கேரளா: கேசவதாசபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் தினராஜ் மனோரமா வயதான தம்பதிகள். தினராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மகள் வீட்டிற்கு சென்று உள்ளார். ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் அலறல் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தினராஜிற்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்து தினராஜ் பார்க்கும் பொழுது மனைவி மனோரமா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தான் வீட்டின் கிணற்றிற்குள் மனோரமா சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி மனோரமா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து சோதனை செய்ததில், கழுத்து நெறிக்கப்பட்டு மனோரம்மா கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின் போலீசார் சந்தேக அடிப்படையில் மூதாட்டி மனோராமா வசிக்கும் வீட்டின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் வேலை செய்வதற்காக தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர். மேலும் அவர்களுடன் தங்கி இருந்த 21 வயதுடைய ஆதம் அலி என்ற நபர் நேற்றிலிருந்து காணவில்லை எனவும் தெரிவித்து உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த 5 பேரையும் பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் காணாமல் போன ஆதம் அலி பயன்படுத்திய செல்போனும் உடைக்கப்பட்டு உள்ளது. போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் மனோரமா வசித்து வந்த வீட்டில் இருந்து அருகில் இருக்கும் வீட்டிற்கு இடையே 6 அடி உயரத்திற்கு மதில் சுவர் உள்ளது என்றும் இறந்த ஒரு உடலை தனியாக தூக்கி சென்று கிணற்றினுள் போட முடியாது. ஆகையால் இந்த கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.