ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிதீவிர மழை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய கேரள முதலமைச்சர் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

முல்லைப்பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 5, 2022, 4:55 PM IST

சென்னை:முல்லைப்பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஷட்டர்களை 24 மணி நேரத்திற்கு முன்பே திறப்பது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ''கேரளாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கியுள்ள நிலையில், இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏற்கெனவே ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் கடுமையாக உயரும். அணைக்கு அதிகளவு நீர்வரத்து வரும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப்பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவும், நீர் வெளியேற்றத்தை சீராக்க உங்கள் அவசரத் தலையீட்டைக் கோரவும், இதனால் IMD கணிப்புகளின்படி, நீர் மட்டத்தை சீராக குறைக்கவும் விரும்புகிறேன்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப்பகுதியில் பெய்து வரும் கனமழையைக்கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வெளியேறும் நீர், வெளியேற்றம், உபரிநீரை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

in article image
அதிதீவிர மழை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய கேரள முதலமைச்சர்

இதையும் படிங்க:Video: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details