சென்னை: சிங்காரச் சென்னையின, மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், கென்யா நாட்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், அவர்களின் கட்டிப்பாட்டில் இருந்த 4 கென்யா நாட்டு பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும், ஆபாச பொம்மைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியின் சிவி ராமன் சாலையில் ராஜ் இன் என்ற பெயரில் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், பாலியல் தொழில் நடப்பதாக, அவ்வப்போது அரசல் புரசலாக, தகவல்கள் வந்து கொண்டு இருந்த நிலையில், அங்கு கடந்த சில நாட்களாக, கென்ய நாட்டு பெண்களின் நடமாட்டம் காணப்பட்டு வந்தது. அந்த விடுதியில், கென்யா நாட்டை சேர்ந்த நான்சி வைரமு, நான்சி முதோனி, மில்செண்ட்தேரா, ஹனைஸ் வான்ஜிகு ஆகிய நான்கு பெண்கள், மே மாத துவக்கத்தில் இருந்து, இரண்டு அறைகளை எடுத்து, அதில் தங்கி வந்து உள்ளனர்.
போலீசில் புகார்:இந்நிலையில் நேற்று (மே 28) ஹனைஸ் வான்ஜிகு என்ற இளம்பெண், சக பெண்கள் தன்னை அடித்து அறையை விட்டு துரத்திவிட்டதாக கூறி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக விசாரணையை துவக்கினர். இதனையடுத்து புகாருக்கு உள்ளான விடுதிக்கு சென்ற போலீசார், அறையில் தங்கி இருந்த கென்யா நாட்டு பெண்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
திடுக் தகவல்:விசாரணையில் லாட்ஜில் கென்யா நாட்டை சேர்ந்த நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும், பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் வான்ஜிகு என்ற பெண்ணை மற்ற பெண்கள் சேர்ந்து துரத்தி அடித்ததும் தெரியவந்து உள்ளது. இதனையடுத்து லாட்ஜில் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய ஆபாச பொம்மைகளை கைப்பற்றிய போலீசார், லாட்ஜின் உரிமையாளர் சரவணராஜ்(43), சேலத்தை சேர்ந்த பராமரிப்பாளர் கண்ணன்( 40) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கென்யா நாட்டை சேர்ந்த நான்கு இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: Arts and Science Admission: கலை அறிவியல் சிறப்புப்பிரிவு கலந்தாய்வு துவக்கம்..