தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர், பிரதான கோரிக்கையாக மூன்றாவது அணியை அமைப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மு.க. ஸ்டாலின் - சந்திரசேகரராவ் சந்திப்பின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கேசிஆர் - ஸ்டாலின் சந்திப்பு; மூன்றாவது அணி அமைய வாய்ப்பு! - chennai
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.
கேசிஆர் -ஸ்டாலின்
மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து மாபெரும் கூட்டணியுடன் நாடு முழுவதும் மூன்றாவது கட்சி உருவாக அந்தந்த மாநிலத்தின் பிரதான கட்சி தலைவர்களை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது, திமுகவின் நிலைப்பாடு குறித்து மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
Last Updated : May 13, 2019, 9:31 PM IST