சென்னை:சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுநரின் உரைக்கு கருணாஸ் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஆர்.என். ரவி பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு குறித்து. இது மிகவும் ஆபத்தான இயக்கம். இந்த இயக்கம் மாணவர்களைப் போலவும் மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நாட்டில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இயங்குகிறது. பல நாடுகளுக்கு தீவிரவாதத்துக்கு ஆள்களை அனுப்புகிறது என்றெல்லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி கொக்கரித்துள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது”
ஆளுநரா? அரசியல்வாதியா? ஆளுநர் அவர் வகிக்கும் பொறுப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பது அருவறுக்கத்தக்கது. ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸின் அசல்முகமாகவே தொடர்ந்து செயலாற்றுகிறார். இனியும் நாம் பொறுத்துக்கொண்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. ஆர்.என்.ரவி. ஆளுநரா? இல்லை முழு நேர அரசியல்வாதியா? என்ற கேள்வியையும் எழுப்பியுளார் கருணாஸ்.
’ஆளுநர் ரவி ஆர் எஸ்.எஸ்ஸின் குரல்’:மேலும் அவர் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா ஒரு மக்கள் இயக்கம், மனித உரிமைச் செயல்பாடுகள், சமூக முன்னேற்றம், அனைவருக்கும் கல்வி எனப் பல்வேறு பணிகளை முன்வைத்து செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவர். இத்தகைய அமைப்பை தேவையற்ற ஒரு பொய்க்குற்றச்சாட்டின் மூலம் களங்கப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆளுநர் பொறுப்பில் வகிப்பவர் இப்படி பேசியிருப்பது வரம்பு மீறிய செயல் ஆளுநர் ரவி ஆர் எஸ்.எஸ்ஸின் குரலாக பேசுகிறார் என்பதற்கு வேறொன்றும் சான்று தேவையில்லை எனவும் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.