காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைமையில் சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய கார்த்தி சிதம்பரம், "முன்பெல்லாம் மசோதாக்களை கொண்டுவரும் முன்பு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டு விவாதிக்கப்படும். ஆனால் தற்போதைய ஆட்சியில் இணையதளத்தில் முந்தைய நாள் இரவு பதிவு செய்து, காலையில் மசோதாவை கொண்டுவருகிறார்கள்.
சில கட்சிகள் பாஜகவிற்கு அஞ்சுகின்றன: கார்த்தி சிதம்பரம் - Conference
சென்னை:பாஜகவைக் கண்டு சில கட்சிகள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார்கள் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதைப்பற்றி விவாதிக்க குறைந்த நிமிடங்களே தரப்படுகின்றன. இந்திய சரித்திரத்தில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறியது இல்லை. முதல்முறையாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. 370ஆவது பிரிவு இருப்பதால்தான் காஷ்மீர் வளர்ச்சி அடையவில்லை என யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கு காரணம் கூறுகிறார்கள். அப்படியென்றால் காஷ்மீரைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சிக் குறைந்த உத்தரப் பிரதேசம், பிகாரை யூனியன் பிரதேசமாக மாற்றுமா பாஜக? பாஜகவை கண்டு அஞ்சி சில கட்சிகள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார்கள்" என்றார்.