தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் தவறில்லை'- கார்த்திக் சிதம்பரம் - முத்தையா முரளிதரன்

முத்தைய முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஒன்றும் தவறில்லை என காங்கிரஸ் எம்பி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

muthaiya muralitharan vijay sethupathi
'முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தவறில்லை'- கார்த்திக் சிதம்பரம்

By

Published : Oct 14, 2020, 2:06 PM IST

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "குஷ்பு பாஜகவில் இணைந்தது பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. அது முடிந்து போன கதை என்றார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்ககூடாது என்று சிலர் வலியுறுத்துவது குறித்து கேட்டதற்கு, "முத்தையா முரளிதரன் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர். சர்வதேச அளவில் அதிக விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

'முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தவறில்லை'- கார்த்திக் சிதம்பரம்

அவரைப் பற்றி திரைப்படம் எடுப்பதில் என்னை பொருத்தவரையிலும் எந்தத் தவறும் இல்லை. அரசியல் ஆசாபாசங்களை வைத்து அவரை சித்தரிப்பது அவசியமில்லாத ஒன்று. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதும் அதில், விஜய் சேதுபதி நடிப்பதும் தவறில்லை" என்றார்.

இதையும் படிங்க:விஜய் சேதுபதி படத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details