சென்னை:சென்னை பாடி தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கீதா. கணவர் உயிரிழந்த நிலையில், தனது பகுதியில் உள்ள பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கீதா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் பாஜகவில் பொறுப்பில் இருக்கும் நடிகை ஜெயலட்சுமி, அவரது மகள் அனகா, அவரது வழக்கறிஞர் என தங்கள் சுய உதவிக் குழுவில் உள்ள 9 பேருக்கும் கந்துவட்டிக் கொடுமை அளித்து மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கீதா, "தேர்தல் நேரத்தில் எங்கள் குழுவுக்கு அறிமுகமான நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி மூலம் லோன் வாங்கித் தருவதாகக் கூறி 7 பெண்களுக்கு 1 லட்சம் ரூபாயும், 2 பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பெற்றுத்தந்தார். அதற்கு எங்களிடம் இருந்து கையொப்பமிட்ட வெற்று காசாலை, கையொப்பமிட்ட வெற்று ஸ்டாம்ப், பேப்பர் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.
ஜெயலட்சுமி உறுதி