தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ?'

சென்னை: மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kanimozhi conmed AYUSH Union Ministry Secretary
Kanimozhi conmed AYUSH Union Ministry Secretary

By

Published : Aug 22, 2020, 11:27 AM IST

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலுமிருந்து 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அதில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரிக்கைவைத்துள்ளனர். ஆனால் அவர், "எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது. இந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம்" எனக் கூறியுள்ளார்.

இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டரில், "மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு, உடனடியாக அந்தச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப்போகிறோம்?" எனப் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...தூக்கமின்மைக்கு ஆயுர்வேதத்தில் என்னதான் தீர்வு இருக்கு?

ABOUT THE AUTHOR

...view details