திருச்சி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு இல்லை என்பதாகத்தான் பார்க்க முடிகிறது. மக்களின் குரல் நாடாளுமன்ற சபையில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை என்றார்.
மாஃபா பாண்டியராஜன் கருத்து தேர்தல் வாக்குறுதிபோல் உள்ளது - கமல்ஹாசன்! - kamalhassan
சென்னை: அடுத்த மத்திய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு இடம் கிடைக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறிய கருத்து தேர்தல் வாக்குறுதிபோல் உள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்
அதேபோல், அடுத்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தமிழ்நாட்டிற்கு இடம் கிடைக்கும் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறிய கருத்து, தேர்தல் வாக்குறுதிபோல் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.