நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகின்ற மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய கமல்! - சென்னை அண்மைச் செய்திகள்
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிரிவித்தார். ஏற்கனவே ட்விட்டர் வாயிலாகவும் கமல் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: மருத்துவர் உட்பட 2 பேர் கைது