சென்னை:கரோனா தடுப்பூசி இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களுக்கும் முதியோர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் சிலர் தயக்கம் காட்டிவருகின்றனர். மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக இந்தியாவின் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் என பலர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று (மார்ச் 2) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.