சென்னை:எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ் பெண் நா.முத்து தமிழ்செல்விக்கு இன்று (ஆகஸ்ட்15) துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஜோகல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி (வயது 34). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
மேலும், வில் வித்தை, மலை ஏற்றம் என விளையாட்டு துறையில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த மார்ச் மாதம் பெண்கள் தினத்தன்று திருபெருமந்தூர் அருகே உள்ள 155 அடி உயரம் கொண்ட மலையை கண்களை கட்டி கொண்டு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இறங்கி தனது முதல் சாதனையைப் படைத்தார்.
முதல் சாதனை தனக்கு உறுதுணையாக இருந்த நிலையில் இரண்டாவதாக தனது மகள்களுடன் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலாங் கிராமத்தின் 165 அடி உயரமுள்ள மலையை 55 விநாடிகளில் இறங்கி சதானை படைத்துள்ளார். இது போன்ற சாதனைகளை படைத்து வந்த முத்தமிழ்செல்வி எவரெஸ்டின் மீது ஏறி சாதனை படைக்க பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் பொருளாதார வசதி இல்லாமல் தவித்த வந்து உள்ளார். இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்து தமிழ்செல்வியை நேரில் அழைத்து 10 லட்ச ரூபாய் அரசு சார்பில் உதவி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமச்சர் உதயநிதி ஸ்டாலின் 15 லட்ச ரூபாய் வழங்கினார்.