தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம்: மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்! - Kalashetra College in chennai

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் தொடர்பாக, கலாசாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ஜி. பிரவீணா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 4, 2023, 9:22 PM IST

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கலை கல்லூரியில் பாலியல் புகாரில் மௌனம் காத்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ஜி. பிரவீணா தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கலாஷேத்ரா மாணவ மாணவிகளை தேவதாசி சிஸ்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஹரி பத்மனுக்கு குரு பரம்பரா லைசன்ஸ் வழங்கி இருக்கிறது. பாலிய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தால், கலாஷேத்ரா மாணவ மாணவிகளுக்கு படிப்பில் தடை ஏற்படும். மேலும் பரதநாட்டியம் மற்றும் இசை, நடன, நாடக நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என தடை விதித்து பரதநாட்டிய கலை மற்றும் இசைகளை பங்கேற்பை தடை செய்வது கலாஷேத்ரா குழு பரம்பராவின் வழக்கமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கலாஷேத்ரா குரு பரம்பரா பாலியல் குற்றங்களை ஊக்குவிப்பு செய்கிறது.

இதனால் கலாஷேத்ராவில் பல பெண்கள், மாணவிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு பரதநாட்டிய கலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, கலாஷேத்ரா கல்லூரியை விட்டு வெளியேறி உள்ளனர். பல மாணவ மாணவிகள் தங்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் மனம் புழுங்கியும் மன அழுத்தத்தால் தவித்தும் வந்துள்ளனர்", எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "டிசம்பர் 25, 2022 லீலா சாம்சன் முன்னாள் இயக்குநர் கலாஷேத்ரா பாலியல் கொடுமைகளை வெளியே கொண்டு வந்து வலைத்தளத்தில் பதிவு செய்தார். அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் பல கலாஷேத்ரா குரு பரம்பரா பாலியல் குற்றங்கள் அடுக்கடுக்காக வெளிவந்தது. ஆனால், கலாஷேத்ரா உள்ளே இயங்கும் ''இன்டெர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி'' எந்த ஒரு புகாரையும் பதிவு செய்ய மறுத்து கலாஷேத்ரா மாணவ - மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் செய்த குரு பரம்பரா குற்றவாளிகளுக்கு சாதமாகவே நடந்து கொண்டது. குற்றங்களை மூடி மறைத்தது. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை மேலும் வஞ்சித்தது. கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் முதல்வர் மற்றும் ஐசிசி மெம்பர்ஸ் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

மார்ச் 25, 2023-ல் கல்லூரி மாணவிகள் குரு பரம்பரா மீது பதிவு செய்த பாலியல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, தேசிய பெண்கள் ஆணையம். இந்த ஆணையத்தின் புதிய தலைவர் ரேகா சர்மா, தமிழக போலீஸ் தலைமை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை மிரட்டி மாணவ - மாணவிகள், குரு பரம்பரா மீது கொடுத்த பாலியல் போராட்டங்களையும் மூடிவிட என வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தற்போது பாஜக மத்திய கலாசார அமைச்சர் கிஷன் ரெட்டி ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் இரு அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மற்றும் மீனாட்சி லேக்கி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details