மீன்வளத்துறை சார்பாக மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட திமிங்கலம் ஒன்று, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலம் கப்பலில் அடிபட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை திமிங்கலம்! - whale death
சென்னை: தமிழக அரசால் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட திமிங்கலம் ஒன்று, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ளது.
அரியவகை திமிங்கலம்
இதை பைபர் போர்டில், மீனவர்கள் கரையில் கொண்டு வந்து சேர்த்தனர். அரியவகை திமிங்கலத்தினை பார்வையிட்டு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். தகவலறிந்து விரைந்த மீன்வளத்துறை இயக்குநரக அலுவலக அதிகாரிகள், திமிங்கலத்தை கைப்பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்