இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறான கருத்துகள் எதையும் வெளியிடாத முத்தரசனுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்க வேண்டிய ராமதாஸ், ஒரு சார்பு எடுத்திருப்பது வேதனைக்குரியது என்றும், தந்தை பெரியார் பிறந்த மண்ணில் சாதியை வைத்து கலவரங்கள் நடைபெறுவது வெட்கக்கேடு எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
‘பெரியார் பிறந்த மண்ணில் சாதியை வைத்து கலவரமா?’ - வீரமணி காட்டம்!
சென்னை: பெரியார் பிறந்த மண்ணில் சாதியை வைத்து கலவரம் செய்வதா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
வீரமணி
அதேபோல், சாதி என்பது மனிதத்தன்மைக்கு விரோதமானது என்றும், தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் சமுகநீதிப் பயணத்தில் கடந்து செல்லவேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நமக்குள் இருக்கும் பிளவு எதிரிகளுக்குக் கொண்டாட்டமாக மாறிவிடக்கூடாது என்பதால் சமூகநீதி பயணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு உதவத் தயார் எனவும் கி.வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.