தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டெண்டர் முறைகேடு: நிச்சயம் நடவடிக்கை' - கே.என் நேரு - டெண்டர் முறைகேட்டில் நடவடிக்கை

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

கே.என் நேரு
கே.என் நேரு

By

Published : Jun 26, 2021, 8:08 PM IST

சென்னை:, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்வை ரிப்பன் மாளிகையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் தலைமையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "சாலை வசதி, மயான வசதி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வகுக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்வரும் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்காங்கே கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.என் நேரு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்டம்

'குடிநீர் தட்டுப்பாடு இருக்காது'

குறிப்பாக சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களான ராயப்பேட்டை, பெசன்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும்.

அதேபோல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தற்போது 900 எம்எல்டி தண்ணீர் கிடைத்து வருகிறது, கூடுதலாக 400 எம்எல்டி தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கே.என் நேரு பேட்டி

அதுமட்டுமின்றி பொதுமக்களின் வீடுகளிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு குறித்து அலுவலர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க;சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி

ABOUT THE AUTHOR

...view details