சென்னை:தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகளை மேற்காெண்டு வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள், பொதுமக்கள், கல்வியாளர்களிடம் கருத்துகளை ஏற்கனவே கேட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயர் கல்வித்துறையில் மேற்காெள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநிலப் பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் புதியக்கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான முருகேசன் , உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்காெண்டனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன், 'மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பல்வேறு தரப்பினரிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பல்கலைக் கழக துணைவேந்தர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது துணைவேந்தர்கள் பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்கக் கூடாது என்கிற கருத்தை தெரிவித்தனர். மேலும் பல்வேறு பாடத்திட்டங்கள் இருந்தால் தான் மாணவர்களின் திறன் அதிகரிக்கும்.