தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9PM - தமிழ்நாடு, சர்வதேசம் சாம்பியன்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

news 9 pm
news 9 pm

By

Published : Jun 4, 2020, 8:51 PM IST

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கவலைக்கிடம்- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ - ஆவின் நிர்வாகம்

சென்னை: சமூக விரோதிகளும், சில தொழில் போட்டியாளர்களும் தங்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வருவதாக ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.

’சமூகப் பரவலை நோக்கி தமிழ்நாடு செல்கிறது' - இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர்

ஈரோடு: தமிழ்நாடு சமூகப் பரவலை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என். ராஜா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு!

டெல்லியில் எடுக்கப்பட்ட காற்றின் தரம் குறித்த ஆய்வில் 57 விழுக்காடு பேர் காற்றின் தரம் ’மோசம், மிகவும் மோசம்’ என மதிப்பிட்டுள்ளனர்.

வறுமையால் 2 தொழிலாளர்கள் தூக்கிட்டுத் தற்கொலை!

பண்டா: கரோனா நெருக்கடியில் இரண்டு தொழிலாளர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை: ட்ரம்பை விமர்சித்த ஈரான் அதிபர்

தெஹ்ரான்: அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ஈரான் நாட்டு அதிபர் ஹாசன் ரவ்ஹானி விமர்சித்துள்ளார்.

அட குஷ்புவா இது?- லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

சென்னை: லாக் டவுன் சூழலில் வீட்டில் இருக்கும் நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

கரோனா பரவாத வகையில் கிராமம் உருவாக்க மிஷன் இம்பாசிபிள் டாம் க்ரூஸ் திட்டம்

நடிகர்கள், தயாரிப்பாளர், படக்குழுவினர் என அனைவரும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்ளும் விதமாக ஒரே இடத்தில் தங்கி 'மிஷன் இம்பாசிபிள் 7' படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனராம்.

முன்னாள் கேப்டன் கோரிக்கையை நிராகரித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்...!

டாக்கா: மிர்பூர் மைதானத்தில் வங்கதேச அணி வீரர்களை பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும் என வங்கதேச முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீம் வைத்த கோரிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

'டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதே எனது லட்சியம்' - சாம் பில்லிங்ஸ்

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதே தனது லட்சியம் என இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details