தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - நிசார்கா புயல்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @1PM
Top 10 news @1PM

By

Published : Jun 2, 2020, 1:06 PM IST

சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மோடி செய்த புதிய செயல்!

டெல்லி: சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி புதிய வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அத்துமீறிய பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிரா, குஜராத்தை தாக்கவரும் நிசார்கா புயல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

டெல்லி : மகாராஷ்டிரா, குஜராத்தில் நாளை கரையைக் கடக்கவுள்ள நிசார்கா புயல் குறித்த முக்கியத் தகவல்களை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.

மானிய விலையில் திருப்பதி லட்டு : ஹைதராபாத் வாசிகளிடம் அமோக வரவேற்பு

ஹைதராபாத் : ஹிமாயத்நகர் பகுதியில் மானிய விலையில் விற்கப்படும் திருப்பதி லட்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதென திருமலை தேவஸ்தான அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிபெயர்ந்தோருக்கு அனைத்தும் செய்துதருக; அதை நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்'

டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆம் ஆத்மி அரசுக்கு அறிவுறுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

'எந்த கட்சி ஆட்சி இருந்தாலும் அறப்போர் இயக்கம் கேள்வி கேட்கும்' - ஜெயராம் வெங்கடேசன் நேர்காணல்!

சென்னை: எந்த கட்சி ஆட்சி இருந்தாலும் அறப்போர் இயக்கம் கேள்வி கேட்கும் என அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஈடிவி பாரத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் தெலங்கானா!

ஹைதராபாத்: நாட்டின் இளைய மாநிலமான தெலங்கானா கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
வட்டியில்லாக் கடன் வழங்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம் : மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடனை தள்ளுபடி செய்து வட்டியில்லாக்கடன் வழங்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட், குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் - ட்ரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவில் காவல் துறை பிடியில் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், அவரது குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் என அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

கோவிட் 19: உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி

ஒட்டாவா: கனடாவில் கரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ள 2.2 பில்லியன் கனடா டாலரை சிறப்புநிதியாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details